கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தவும், அதற்கான பரிசோதனையிலும் பல உலகநாடுகள் தீவிரமாக செயல்பட்டுவருகின்றது. வல்லரசு நாடுகள் எனக்கூறப்படும் அமெரிக்காவில் அதிக அளவில் கொரோனா பரவலும், இறப்பு விகிதமும் அதிகமாகி வந்தது.

அதில், ‘நம் அமெரிக்காவில் கொரோனா பரவலை தடுக்க பல முயற்சிகள் செய்து வருகின்றனர் இந்நிலையில் தற்போது கொரோனா தடுப்பூசியை ஊக்குவிக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், தடுப்பூசி அட்டையைக் காண்பித்து, எங்கள் கடையில் தினந்தோறும் இலவச டோனட்டைப் பெற்றுச் செல்லலாம். ஆண்டு முழுவதும் இந்தச் சலுகையை வழங்க முடிவெடுத்துள்ளோம்.
அதே நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்வது மக்களின் தனிப்பட்ட முடிவு. அதில் நாங்கள் தலையிடவில்லை. எனினும் எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் நாடு பாதுகாக்கப்படும் என்ற எண்ணத்தில் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
இது கொரோனா போடதவர்களுக்கும் மார்ச் 29 முதல் மே 24 வரை திங்கட்கிழமைகளில் இலவச டோனட்டும் காஃபியும் வழங்கப்படும்’ என அறிவித்துள்ளது.
இதனால் டோனட் சாப்பிடும் வெறியர்கள், கொரோனா தடுப்பூசி செலுத்துக்கொண்டு, டோனட் சாப்பிட கிளம்பியத்தில் ‘க்ரிஸ்பி க்ரீம்’ கடையில் கூட்டம் அலைமோதி வருகிறது.