தேர்தல் பிரச்சாரத்தில் நடந்த துயரம்’… ‘திடீரென மயங்கி விழுந்து இறந்த எம்பி’… சோகத்தில் உறைந்த தொண்டர்கள்!

பிரச்சாரத்தின் போது மாநிலங்களவை எம்.பி முகமது ஜான் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Election : ADMK MP Mohd John\'s sudden death while campaigning

இடைவேளையில் வீட்டிற்குச் சென்று மதிய உணவு சாப்பிட்ட அவர், மீண்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதனையடுத்து, வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனையின்போது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Election : ADMK MP Mohd John's sudden death while campaigning

அதனையடுத்து, அவரது உடல் வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது. பிரச்சாரத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மது ஜான் இறந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க சார்பில் 2019-ம் ஆண்டு அவர், மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு இன்னமும் 4 ஆண்டுகள் பதவிக் காலம் உள்ளது. ஜெயலலிதாவின் அமைச்சரவையில்   சிறுபான்மைத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.