புலிகள் விமானத் தளம் இருந்த நாடான எரித்திரியா இலங்கை பக்கம் சாய்ந்தது எப்படி ?

பல வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் எரித்திரியா நாட்டோடு நல்லுறவில் இருந்தார்கள். அவர்களது விமானங்கள் கூட அங்கே தங்கவைக்கப்பட்டு பின்னர் தான் அவை வன்னி வந்ததாகவும்
கூறப்படுகிறது. இன் நிலையில் நடந்து முடிந்த ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில். இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையை எதிர்த்த முதல் நாடாக எரித்திரியா உள்ளது. 2009ம் ஆண்டுக்கு
பின்னர் அன் நாடோடு இலங்கை ராஜதந்திர ரீதியில் உறவுகளை வளர்த்துள்ளதே இதற்கு காரணம்.

மேலும் பங்களாதேஷ், பொலீவியா, கியூபா, சீனா, ரஷ்யா, பாக்கிஸ்தான், பிலிப்பைன்ஸ், சொமாலியா, உஸ்பாக்கிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளும் இலங்கைக்கு ஆதரவாக பிரேரணைக்கு எதிராக
வாக்கு போட்டுள்ளது. இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால். பிலிப்பைன்ஸ் நாடு மீது சீனா பெரும் அச்சுறுத்தலை கட்டவிழ்த்து விட்டுள்ளது. அன் நாடு சீனாவோடு பெரும் எதிர்ப்பில் உள்ளது. ஆனால்
சீனா ஆதரிக்கும் இலங்கைக்கு ஆதரவாக உள்ளது. ஏன் எனில் அவர்களுக்கு அமெரிக்கர்களை கண்ணில் காட்டக் கூடாது. அமெரிக்கா மற்றும் பிரித்தானியா இணைந்து கொண்டு வந்த தீர்மானம் என்றபடியால்
அவர்கள் அதனை எதிர்த்துள்ளார்கள்.

இது போக சோமலிய கடல் கொள்ளையர்களுக்கு ஆயுதங்களை வழங்கிவிட்டு. இந்துமா கடலில் பெரும் அசாதாரண சூழ் நிலையை ஏற்படுத்தி இருந்தார் கோட்டபாய. பின்னர் இலங்கை கடல் படை உதவிகள்
செய்யும் என்று கூறி சர்வதேச கப்பல் நிறுவனங்களிடம் அவன் காட் மூலமாக் மில்லியன் கணக்கான டாலர்களை பெற்று பாதுகாப்பு வழங்கினார்கள். இந்த டீல் ஊடாக சோமாலியா நாட்டையும் இலங்கை தற்போது
வளைத்துப் போட்டுள்ளது. தமிழர்கள் இதனூடாக நிறைய பாடம் கற்க்க வேண்டி உள்ளது.

ஜியோ பாலிடிக்ஸ் என்று அழைக்கப்படும்( பிராந்திய அரசியலில்) தமிழர்கள் தற்போது சிக்கித் தவிக்கிறார்கள். மிகப் பெரிய வல்லரசுகளான சீனா, ரஷ்யா அமெரிக்கா போன்ற நாடுகளின் பெரும் அரசியல்
விளையாட்டில் ஈழத் தமிழர்கள் சிக்குண்டு கிடக்கிறார்கள். இதில் போதாக் குறைக்கு பிராந்திய வல்லரசான இந்தியாவும் தமிழர்கள் தலையில் மிழகாய் அரைக்கிறது.