அணு குண்டை ஏவக் கூடிய விமானம் பறக்கு முன்னரே பைலட்டை தூக்கி எறிந்த ஆசனம்- ரஷ்யாவில்

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கலுகா பிராந்தியத்தில் விமானப்படை தளம் உள்ளது. இங்கிருந்து நேற்று காலை, ஒலியை விட வேகமாக செல்லும் இரட்டை என்ஜின் கொண்ட டியூ:22எம்3 ரக அணு குண்டு வீச்சு விமானம் வழக்கமான பயிற்சிக்காக புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் விமானிகள் 3 பேர் புறப்படுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக, விபத்து காலங்களில் விமானிகளை தானாக விமானத்தில் இருந்து வெளியேற்றும் அமைப்பு தவறுதலாக செயல்பட்டு 3 விமானிகளையும் வெளியேற்றியது. இதனால் 3 விமானிகளும் தூக்கி வீசப்பட்டார்கள். ஆனால் அவர்கள் பார ஷூட் விரிய முன்னரே அவர்கள் நிலத்தில் வீழ்ந்ததால். அவர்கள் மூவரும் ஸ்தலத்திலேயே பலியாகி விட்டார்கள். விமானம் பறந்து கொண்டு இருக்கும் வேளையில். விமானத்தை ஏவுகணை தாக்கினால். அல்லது கிட்ட நெருங்கினால்.

அவர்களது ஆசனம் தானாக வெளியே பீறி அடித்துச் சென்றுவிடும். இந்த அமைப்பு தவறாக செயல்பட்டதே இந்த விபத்திற்கு காரணம்.