மாணவியை 3 மாத கர்பிணியாக்கிய பெரியப்பா மகன்.. அண்ணன் முறை…

தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி டவுன் பகுதியைச் சேர்ந்தவள் 16 வயது சிறுமி. இவள், அதேப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறாள். இந்த சிறுமி, பெற்றோருடன் கூட்டுக்குடும்பத்தில் வசித்து வருகிறாள்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக சிறுமிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த பெற்றோர், சிறுமியை சிகிச்சைக்காக ஒன்னாளி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமிக்கு, டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

3 மாதம் கர்ப்பம்

அதில் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுபற்றி டாக்டர்கள், சிறுமியின் பெற்றோரிடம் கூறினர். இதைக்கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அதிகாரிகள், ஒன்னாளி போலீசாருடன் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் கர்ப்பம் குறித்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது விசாரணையில், கூட்டுகுடும்பம் என்பதால் பெரியப்பா மகனான 17 வயது சிறுவன், சிறுமியை கட்டாயப்படுத்தி பலமுறை கற்பழித்ததும், மேலும் இதுபற்றி வெளியே யாரிடமும் கூறக்கூடாது என்று சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதற்கிடையே சிறுமி கர்ப்பமாகி இருக்கிறார்கள். அதுபற்றி அவள் தனது பெரியப்பா மகனிடம் கூறி இருக்கிறாள். அப்போது அந்த சிறுவன், சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்து இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை சிகிச்சைக்காக சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

பெரியப்பா மகன் கைது

இதையடுத்து சிறுமியை கற்பழித்து 3 மாதம் கர்ப்பமாக்கிய பெரியப்பா மகனான 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து ஒன்னாளி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.