இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மகள் வழி பேத்தியும் இளவரசியுமான சாரா டின்டாலுக்கு நேற்று அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு லூகாஸ் பிலிப் டின்டால் என பெயரிடப்பட்டுள்ளது.
இது இளவரசி சாரா டின்டால் இங்கிலாந்து ரக்பி வீரர் மைக் டின்டால் தம்பதியின் 3-வது குழந்தையாகும். ஏற்கனவே இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இளவரசி சாரா டின்டால் அரண்மனையின் குளியலறையில் இருந்தபோது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதாகவும் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முடியாத நிலையில் குளியல் அறையிலேயே அவர் குழந்தை பெற்றெடுத்ததாகவும் மைக் டின்டால் கூறினார்.
லூகாஸ் பிலிப் டின்டால், இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் 10-வது கொள்ளுப்பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகள்
மிரட்டும் ராணுவம்... அஞ்சாத மக்கள்! - என்ன நடக்கிற...
அமெரிக்க கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட் மரண வழக்க...
அமெரிக்காவின் நியூயார்க்கில் பெரும் பயங்கரம்; நடந்...
5 நாளில் அப்பாவி மக்கள் 39 பேர் கொன்று குவிப்பு; ப...
செவ்வாய் கிரகத்தில் வரலாற்று சாதனை படைத்தது நாசா; ...
டைடானிக் கப்பலில் இருந்து தப்பிப் பிழைத்த 6 சீனர்க...
விவேக்கின் மனைவி சொன்ன அந்த வார்த்தை; கலங்கி நிற்க...
உலகமே எதிர்பார்த்து காத்திருந்த அந்த நிகழ்வு இன்று...