அமெரிக்க நிறுவனத்தில் வேலைக்குச் செல்லும் இளவரசர் ஹாரி; என்ன கொடுமைடா?

பிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவித்த இளவரசர் ஹாரி, மேகன் மார்க்கல் ஆகியோர் தங்களது மகனுடன் தற்போது அமெரிக்காவில் குடியேறி விட்டனர். அடிப்படையில், ஹாரியும் மேகன் மார்க்கலும் இன்னமும் அரச குடும்பத்தின் உறுப்பினர்களாக தொடர்ந்தாலும், கடந்த மாதம் இவர்கள் இருவரும் அரசு குடும்ப உறுப்பினர்களுக்கான பொறுப்புகளிலிருந்து நிரந்தரமாக விடுவிக்கப்படுவதாக பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் அறிக்கையொன்றின் மூலம் கூறியிருந்தார்.

இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து விலகி சுதந்திரமாக வாழ விரும்புவதாக ஹாரியும் அவரின் மனைவி மேகன் மார்க்கலும் அறிவித்தனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிரிட்டனிலிருந்து வெளியேறிய அவர்கள் அண்மையில் தொலைக்காட்சி பிரபலமான ஓப்ரா வின்ஃபிரேவின் நேர்காணலில் பங்கேற்று இங்கிலாந்து அரச குடும்பத்தில் நிறவெறி உள்ளதாகவும், குழந்தை ஆர்ச்சியின் நிறம் பற்றி அரச குடும்பத்தினர் பேசியதாகவும் குற்றம்சாட்டினர்.

தற்போது அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் தங்கியுள்ள ஹாரி, பெட்டர் அப் என்ற பயிற்சி நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.