ஒரு மாசம் லீவ் தருவீங்களா…? ‘வீட்டு வேலை செஞ்சிட்டு இருந்தவங்களுக்கு கெடச்ச வாய்ப்பு…’ – பட்டைய கெளப்பும் பெண்மணி…!

தேர்தல் முடியும் வரை நான் வீட்டு வேலைக்கு வரமாட்டேன் என விடுப்பு எடுத்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர் கலீதா மாஜ்கி.

BJP candidate Khaleda Majki campaigning in West Bengal

கடந்த 2010 ஆண்டு பொது தேர்தலில் 42 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சி 18 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் இந்த தேர்தலிலாவது மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பல வேட்பாளர்களுக்கு மத்தியில் எளிய வீட்டு பணிப் பெண் ஒருவரும் போட்டியிடுகிறார் என்பது அங்கு விசேஷமாக பார்க்கப்படுகிறது.

கலிதா மாஜ்கி, பள்ளி படிப்பை முடிக்கவில்லை என்றாலும் அரசியல் அறிவில் miguvilமிகுந்த தேர்ச்சி பெற்றவர். கடந்த 5 ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து வருகிறார்.

2018 ஆம் ஆண்டு பஞ்சாயத்து தேர்தலிலும் போட்டியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக இந்த முறை பாரதிய ஜனதா கட்சிய கலிதாவை எம்.எல்.ஏ வேட்பாளராக அறிவித்துள்ளது.

வீட்டு வேலை செய்து அரசியலில் ஆர்வமுள்ள கலீதாவை பிரதமர் மோடியும் தனிப்பட்ட முறையில் கலீதாவை பாராட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதில், ‘பாரதிய ஜனதா கட்சி திறமையையும் உழைப்பையும் அங்கீகரிக்க தவறியதில்லை’ என குறிப்பிடுள்ளார்.

இந்நிலையில் வீட்டு வேலை செய்யும் கலீதா தான் எம்.எல்.ஏவாக நிற்கும் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவேண்டும் என, தான் வீட்டு வேலை பார்த்து வந்த உரிமையாளர்களிடத்தில் தனக்கு ஒரு மாதம் விடுப்பு தருமாறு கேட்டுள்ளார்.

அஷ்க்ரம் தொகுதி தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வசமுள்ள நிலையில் கலீதாவுவின் முயற்சி, அணுகுமுறையும் எளிமையான தோற்றமும் அவருக்கு ப்ளஸ் பாயிண்டாக இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் மேற்கு வங்கத்தில் மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தலுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.