எவ்வளவோ உதவி செய்தும் ரஷ்யா பக்க சாயும் இலங்கை- தொடர்ந்து இந்தியா பெரும் அதிர்சியில் !

இலங்கை தற்போது கட்டுக்கு அடங்காமல் சென்று கொண்டு இருப்பதை, அமெரிக்கா தொடக்கம் இந்தியவா வரை நன்றாக உணர்ந்து கொண்டுள்ளார்கள் என்று தான் கூறவேண்டும். புலிகளை அழிக்க உதவுங்கள், பின்னர் உங்கள் சொல் படி நடக்கிறேன் என்று கூறி பல உதவிகளை பெற்ற இலங்கை. புலிகளை வென்ற பின்னர், பல உலக நாடுகளை ஏமாற்றி விட்டு, சீனா மற்றும் அதன் நேச நாடான ரஷ்யா பக்கம் சாய்ந்து நிற்கிறது.

இலங்கையில் இந்தியாவின் கோவி-ஷீல்டு தடுப்பூசியே பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுமார் 70 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு இலங்கை ஆர்டர் கொடுத்துள்ள விடைய இந்தியா தலையில் இடியாக இறங்கியுள்ளது. ஜனவரி மாத இறுதியில் நட்பு ரீதியாக சுமார் 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளை இலங்கைக்கு இந்தியா இலவசமாக வழங்கியது. அதைத்தொடர்ந்தே தடுப்பூசி செலுத்தும் பணிகளை இலங்கை தொடங்கியது. தொடர்ந்தும் இந்தியாவிடம் தடுப்பூசிகளை பெறும் என்று எதிர்பார்கப்பட்ட நிலையில் தான் இன் நிகழ்வு இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.26