இந்தியா தொடர்பில் முகேஷ் அம்பானி பெருமிதம்; சொன்னது உண்மைதானா?

2020-ம் ஆண்டுக்கான தொழில்முனைவோர் விருது வழங்கும் விழாவில் மெய்நிகர் தொழில்நுட்ப முறையில் ரிலையன்ஸ் நிறுவன குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ‘இந்தியாவின் எழுச்சிகான உந்து சக்தியாக நம்முடைய தொழில்முனைவோர்கள் இருப்பார்கள். யாரெல்லாம் தினசரி புதியவற்றைக் கண்டுபிடிக்கிறார்களோ அவர்கள் இந்தியாவையும், உலகையும் மாற்றியமைக்க முடியும். பொருளாதாரம், ஜனநாயகம், கலாச்சாரம், டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பச் சக்தி ஆகியவற்றில் உலக அளவில் இந்தியா வளர்ந்துவருகிறது. வரும் பத்தாண்டுகளில் உலக அளவில் முதல் மூன்று பொருளாதார சக்தியாக வருவதற்கான பலம் இந்தியாவுக்கு உள்ளது.

நான் இன்றைய இந்தியாவையும், நாளைய இந்தியாவையும் பார்க்கும்போது தொழில்முனைவோர்களுக்கு சுனாமி போல ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. என்னுடைய நம்பிக்கைக்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவது நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்காக தனியார் துறைக்கு முக்கிய்த்துவம் அளிக்கிறார். இரண்டாவதாக, நம்முடைய பொருளாதாரத்தை மாற்றியமைக்க நம்மிடம் புதிய வகை புரட்சிகரமான தொழில்நுட்பங்கள் உள்ளன. 130 கோடி மக்களுக்கான நல்ல வாழ்க்கைக்கான தேவை மற்றும் கனவுகளை சந்திப்பதற்கான வாய்ப்பு நம் வாழ்க்கையில் ஒருமுறை நம்முடைய தொழிலுக்கு கிடைக்கும்.

புதிய துறைகளான தூய்மையான ஆற்றல், கல்வி, சுகாதாரத்துறை, வாழ்கை அறிவியல், உயிரிதொழில்நுட்பம், விவசாயத்துறையில் ஏற்படும் மாற்றம், தொழிற்சாலைகள், சேவைத்துறையில் முன்னெப்போதும் இல்லாதவகையிலான வாய்ப்புகள் உள்ளன. உலகத் தரத்துடன் போட்டிப்போடும் அளவுக்கு தரமான பொருள்களை உரிய விலையில் வழங்குவதற்கான திறமை இந்திய தொழில்முனைவோர்களிடம் உள்ளது. புதிய தொழில்முனைவோர்கள் அளவற்ற கனவுளுடன் அளவான வாய்ப்புகளுடன் பணியாற்றுவதற்கு தயாராக இருக்கவேண்டும்’ என்று தெரிவித்தார்.