பெட்டிலி Grammar School மூடப்பட்டது: மெகமெட் கேலி சித்திரத்தை காட்டிய ஆசியரலால் வந்த வினை !

ஆடான… ஆடுகள் எல்லாம் தவிடு… புண்ணாக்கு என்று அலைய. ஒரு ஆடு மக்-டொனால்ஸ் கேட்ட கதையாக. நாடே கொரோனா தொற்றில் திண்டாடிக் கொண்டு இருக்க, பிரித்தானியாவில் உள்ள பெட்லி(BATLEY) என்னும் நகரில் உள்ள கிரமர் ஸ்கூலில் வேலை பார்த்த ஆசிரியர் ஒருவர், முஸ்லீம்களின் புனிதரான மொக-மெட்டின் கேலிச் சித்திரத்தை பிள்ளைகளுக்கு காட்டியுள்ளார். சாளி ஹெட்போ என்ற பிரான்ஸ் புத்தகம் ஒன்று இந்த காட்டூன் படத்தை வெளியிட்டது. இதனால் பிரான்சில் அந்த புத்தக நிலையத்தில் பலர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பது ஊர் அறிந்த விடையம். வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் வெளியிட்ட இந்த கேலிச் சித்திரங்களை, வகுப்புக்கு எடுத்து வந்து மாணவ மாணவியர்களுக்கு காட்டி நக்கலடித்துள்ளார் இந்த ஆசிரியர். ஒரு ஆசிரியர் செய்யும் வேலையா இது ? அங்கே படித்த சில முஸ்லீம் பிள்ளைகள் அதிர்ச்சியடைந்தது மட்டுமல்லாமல். வீட்டில் போய் விடையத்தை சொல்ல. விடையம் பெரிதாக வெடித்தது. சுமார் 50க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் திரண்டு வந்து கடந்த 2 நாட்களாக பள்ளிக்கூடம் முன்னால், பெரும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். நேற்றைய தினமே ஆசிரியரை தாம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்வதாக நிர்வாகம் அறிவித்தது.

ஆனால் இன்று நடந்த ஆர்பாட்டம் காரணமாக பள்ளியை மூடி விட்டார்கள். இதனால் பிள்ளைகளின் படிப்பு குழம்பும் என்று போராட்டக் காரர்களும் நினைக்கவில்லை. இதேவேளை வீட்டில் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் மறைந்து இருக்கும் குறித்த ஆரிசியருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாம். ஒரே நாளில் ஆசிரியரும் வி.ஐ.பி ஆகிவிட்டார். இது எல்லாம் தேவையா ? ஒருவருக்கு இருக்கும் மத நம்பிக்கையோடு நாம் ஏன் விளையாட வேண்டும் ? அவர்கள் மனதை ஏன்  புன் படுத்த வேண்டும் ?

அதிர்வுக்காக
கண்ணன்