இஸ்லாமிய தீவிரவாதிகள் மீளவும் தாக்குதல்களை நடத்த மாட்டார்கள் என்று கூறமுடியாது! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஈஸ்டர் தற்கொலைத் தாக்குதல் பற்றி தாம் எதுவும் அறிந்திருக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறெனினும், தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னதாக புலனாய்வுப் பிரிவினருக்கு தாக்குதல் பற்றிய விபரங்கள் கிடைக்கப் பெற்றிருந்தது.

இவ்வாறான தாக்குதல் சம்பவமொன்று இடம்பெறும் என அறிந்திருந்தால் தாம் உடனடியாக ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி, தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்கியிருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.