சற்று முன் ஸ்ரீ வாத்தி MP யின் மகன் மீது தாக்குதல்- பெண் பிள்ளைகள் மீது சேட்டைக் காரணமா ? மக்கள் விசனம் !

சற்று முன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அண்மையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்குள் வாள், கண்ணாடி போத்தல், இரும்புக் கம்பிகளுடன் வீட்டுக்குள் நுழைந்த 4 மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கொண்ட குழு பாராளுமன்ற உறுப்பினரின் மகன் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டதோடு அவரது மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது.  (கீழே வீடியோ இணைப்பு)

ஸ்ரீ வாத்தியின் மகனை, மோட்டார் சைக்கிளில் திரத்தி வந்த சில இளைஞர் இவர்கள் மீது கடுமையாக தாக்கியுள்ளதாக ஆரம்ப கட்ட நிகழ்வில் இருந்து தெரிய வருகிறது. குறித்த CCTV காணொளியில் ஸ்ரீ வாத்தியின் மகன் மோட்டார் சைக்கிளை நிலத்தில் போட்டு விட்டு வீட்டுக்கு உள்ளே ஓடுவதும். திரத்தி வந்த இளைஞர்கள் தாக்குவதும் பதிவாகியுள்ளது. ஸ்ரீ வாத்தியின் மகன் பெண்கள் மீது சில்மிஷம் செய்தே மாட்டிக் கொண்டதாக மக்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் இனி இதனையும் அரசியல் ஆக்கி விடுவார்கள். இதனால் பிரபல்யமடையும் மகன், இனி மாகாண சபை தேர்தலில் கூட நின்றால் ஆச்சரியப்பட முடியாது.

வந்து தாக்குதல் நடத்திய குழுவினர் சிலர் CCTV கமராவில் பதிவாகி உள்ளார்கள். ஆனால் அனைவரும் ஹெல்மெட் போட்டு இருந்துள்ளார்கள். எவரையும் அடையாளம் காண முடியாத நிலை காணப்படுகிறது.