குக்கூ குக்கூ என தொடங்கும் எஞ்சோய் எஞ்சாமி பாடலை பாடிய பாடகி தீ யின் தந்தை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்!

இன்று உலகத்தமிழர்களால் உச்சரிக்கும் பாடலென்றால் குக்கூ குக்கூ என தொடங்கும் எஞ்சோய் எஞ்சாமி பாடல்தான். இந்த பாடல் வரிகள் , சமூக அக்கறையுடன் எழுதப்பட்டு தீ என்ற இளம்பாடகி மற்றும் அறிவு அவர்களின் குரல்களில் வெளிவந்து அனைத்து இடங்களிலும் பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் இந்த இளம்பாடகி தீ யாரென்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன, அந்த வகையில் இந்தியாவின் முன்னணி சினிமா ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தி பெரும் ஈழத்தமிழர்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம், தீயின் பெயர் தீட்ஷிதா, சுருக்கமாக தீ யென அழைக்கப்படுகிறார், தீயின் தந்தையின் பெயர் வெங்கடேஷ், தாயாரின் பெயர் மீனாட்சி ஐயர், தீ பிறந்தது வளர்ந்தது எல்லாம் அவுஸ்ரேலியாவில்தான்.பின்பு தீயின் தந்தை வெங்கடேஷ்க்கும் தயாரான மீனாட்சி ஐயருக்குமிடையில் கருத்து வேறுபாடு ஏற்படவே இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர்.இதனை தொடர்ந்துதான் பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணனை காதலித்து இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார் மீனாட்சி.

தற்போது தீ அவர்கள் சந்தோஷ் நாராயணனை வளர்ப்பு அப்பாவாக ஏற்றுக்கொண்டுள்ளார் தீ.இந்நிலையில்தான் தீ யின் தந்தையான வெங்கடேஷ் அவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்ற உண்மை வெளியாகி ஈழத்தமிழர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.