சித்தி சீரியல் நடிகையின் தாயாருக்கு பிறந்த குழந்தை.. 19 வருடம் கழித்து அக்காவான சந்தோஷத்தில் குதிக்கும் நாயகி!

சீரியல்களில் நடித்து வரும் பிரபல நடிகையின் அம்மா ஒருவர் 19 வருடம் கழித்து மீண்டும் கர்ப்பமாகி குழந்தை பெற்றுள்ள செய்தி தான் தற்போது சினிமா வட்டாரங்களில் அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது. கேட்போருக்கு ஆச்சரியம் அளிக்கும் விஷயம்தான். வாணி ராணி, சித்தி 2, பாக்கியலட்சுமி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நேகா மேனன். இவருக்கு தற்போது 19 வயதாகிறது.

இவர் விஜய் டிவியில் பிரபலமான நாடகமாக வலம் வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு அதிர்ச்சி அளிக்கும் விஷயத்தை கூறினார்.

அதாவது 19 வருடம் கழித்து அவர் அக்காவாக மாறியுள்ள சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார். மேலும் தன்னுடைய அம்மா நீண்ட நாட்கள் கழித்து குழந்தை பெற்றது சந்தோஷத்தை கொடுத்துள்ளது பூரித்துப் போய் தெரிவித்திருந்தார்.  கல்யாணம் செய்யும் வயதில் மகளை வீட்டில் வைத்துக்கொண்டு அந்த நடிகையின் தாயார் ஒரு குழந்தையை பெற்றுள்ளது தான் தற்போது சமூக வலைத்தளத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. குழந்தை பெற்றுக்கொள்வதை ஏதோ உலக அதிசயம் போல பேசி வருகின்றனர்.

இதை நேகா மேனன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் இது பற்றி யாரும் தவறாக பேசினாலும் எனக்கு கவலை இல்லை, எனக்கு வந்திருக்கும் புது தங்கையை நான் கொண்டாடி மகிழப் போகிறேன் எனவும் கேவலமாக கமெண்ட் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.