தயாரிப்பாளருடன் சமரசமாக இருக்க வேண்டும்.. படுக்கை அழைப்பு பற்றி நடிகை பகிர்ந்த பகீர் செய்தி இது தான் !

ஹிந்தி நடிகை அங்கிதா லோகண்டே நான் இரண்டு முறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் என்று கூறியுள்ளார். சினிமா துறையில் நடிகைகளை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக சில நடிகைகள் புகார் அளித்து வருகின்றனர். அந்த வகையில் ஹிந்தி நடிகையான அங்கிதா லோகண்டேவும் பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

இவண் மணிகர்ணிகா, பாஹி 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, நான் இரண்டு முறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன். ஒரு படத்தில் படிக்கச் சென்றபோது தயாரிப்பாளரிடம் சமரசமாக இருக்க வேண்டும் என்று கூறினார். நானோ உணவு சாப்பிடச் செல்ல வேண்டுமா அல்லது வேறு எந்த மாதிரி என்று கேட்டேன்.

அதற்கு அந்த தயாரிப்பாளர் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார். அதனால் அப்படத்தில் இருந்து விலகினேன். இதை தொடர்ந்து தொலைக் காட்சிகளில் நடித்து நான் பிரபலமாக இருந்த போது மற்றுமொரு சமரசத்திற்கு அழைத்தனர். அப்போது அங்கிருந்து உடனே கிளம்பி விட்டேன் என்று கூறியுள்ளார்.