முதல் ஊசி போட்ட நபர்கள் பாடு அதோ கதியா ? 2வது ஊசி போட பிரிட்டனிடம் மருந்துகள் இல்லை- EU காலைப் பிடிக்கும் நிலையில்

பிரித்தானியாவுக்கு வரவுள்ள பூஸ்டர் என்று அழைக்கப்படும் 2ம் தடுப்பூசிகளை, பிரான்ஸ் நாடு தடுத்து நிறுத்தியுள்ளது. முதல் ஊசி போட்டுக் கொண்டவர்கள் உடலில் தற்போது 63% சத விகிதம் தான் பாதுகாப்பு உள்ளது. 2வது ஊசியை(பூஸ்டரை) 2 மாதம் தொடக்கம் 4 மாதங்களுக்குள் எடுத்தாக வேண்டும். அப்படி என்றால் தான் எமது உடல் 93% சத விகிதம் கொரோனாவுக்கான எதிர்ப்பு தன்மையை பெறும். ஆனால் இந்த 2ம் ஊசிகளை பிரித்தானியா கொண்டு செல்வதை பிரான்ஸ் தற்போது தடை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

இதனால் முதலாம் ஊசி போட்டுக் கொண்டவர்கள் தலையில் இடி இறங்கியுள்ளது. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தோடு பெரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. பிரித்தானியா மருந்து கம்பெனிகளோடு போட்ட உடன் படிக்கையை,  மற்றும் சட்ட திட்டங்களை ஐரோப்பிய ஒன்றியம் மதித்து நடக்க வேண்டும் என்று பிரித்தானிய அமைச்சர்கள் கடுமையான கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்கள். ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் அரசியல் காரணங்களை காட்டி பிரித்தானிய மக்களை பழி வாங்கி வருகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் பிரிந்துள்ள நிலையில், அதற்கு பழி வாங்கும் வகையில் இவர்கள் இவ்வாறு செய்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிரித்தானியா ஆக்ஸ்பேட் தடுப்பு மருந்தை கண்டு பிடித்தாலும். அதனை தயாரிக்க ஆஸ்ரா செனிக்கா நிறுவனத்திடம் தான் கொடுத்து இருந்தது. அன் நிறுவனம் ஐரோப்பிய நாடுகளில் தான் தனது ஊசி தயாரிக்கும் தொழிற்ச்சாலைகள் வைத்திருக்கிறது. அங்கே பிரிட்டனுக்கு என்று தயாரித்துள்ள ஊசிகளை, ஐரோப்பிய ஒன்றியம் தடுத்து வைத்துள்ளது.  என்ன வழியில் இந்த 2ம் ஊசிகளை இவர்கள் பெற்றுக் கொள்ளப் போகிறார்களோ தெரியவில்லை.

ஆனால் இதனூடாக பிரித்தானிய நல்லதொரு பாடத்தை படித்துள்ளது. சில விடையங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தை நம்பி இருந்தால் இப்படி தான் நடக்கும் என்பது தான் அது. எனவே விரைவில் மருந்துகளை தயாரிக்கும் சொந்த நிறுவனங்களை பிரித்தானிய மண்ணில் நிறுவ,  சுகாதார அமைச்சர் ஏற்பாடுகளை செய்வார் என்று எதிர்பார்கப்படுகிறது.