சம்பளத்தை இப்படி கொடுப்பாங்கன்னு தெரிஞ்சிருந்தா…’ ‘ரெண்டு கோணிப்பை எடுத்திட்டு வந்திருப்பாரு…’ என்னதான் கடுப்பு இருந்தாலும் அதுக்காக இப்படியா…? – ரொம்ப ஓவரா போறீங்க…!

அமெரிக்காவில் ஊழியருக்கு அளித்த இறுதி சம்பளம் தற்போது சர்ச்சையாக மாறியிருக்கிறது.

employer paid 91,500 coins stamped salary United States

                                    employer paid 91,500 coins stamped salary United States

‘ஏ.ஓகே. வாக்கர் ஆட்டோ ஒர்க்ஸ்’ என்கிற கடையின் உரிமையாளர் மைல்ஸ் வாக்கர், தன்னிடம் பணிபுரிந்த ஆண்ட்ரியால் ஃப்ளாடென் என்கிற ஊழியருக்குக் கொடுக்க வேண்டிய 915 அமெரிக்க டாலரை, சென்ட்டாக அதாவது 91,500 சென்ட்டாக திருப்பி கொடுத்திருக்கிறார்.

மேலும் அந்த நாணயம் முழுவதும் கிரீஸ் படிந்து இருப்பதாகவும், கிரீஸ் படிந்திருக்கும் நாணயங்களை, தான் ஒவ்வொரு நாணயமாக சுத்தம் செய்ய இரண்டு மணி நேரம் ஆகும் எனவும் கூறியுள்ளார்.

employer paid 91,500 coins stamped salary United States

இது குறித்துப் பேசிய ஃப்ளாடெனும், ‘தெற்கு அட்லான்டாவில் பீச்ட்ரீ நகரத்தில் இருக்கும் அந்த வாகனங்கள் பழுதுபார்க்கும் கடையில் தான் நான் மேலாளராக பணிபுரிந்து வந்தேன். கடந்த நவம்பர் 2020-ல், வேலையை விட்டு வெளியே வந்தேன். அதன்பின் எனக்கு வந்து சேர வேண்டிய பணம் வராததால், தொழிலாளர் துறையிடம் முறையிட்டு உரிமைத் தொகையைக் கேட்டேன். அதன்பின் அமெரிக்க தொழிலாளர் துறையு மூலமாகவே என்னுடைய பணம் எனக்கு கிடைத்தது.

அதுவும், நாணய மலையாகக் கிடைத்தது. அந்த நாணய மலை மீது ஒரு கடிதத்தில் தகாத வார்த்தையில் எழுதப்பட்டு என்னுடைய சம்பள விவரங்கள் இருந்தன’ எனக் கூறியுள்ளார்.

employer paid 91,500 coins stamped salary United States

ஃப்ளாடெனின் அந்த கிரீஸ் படிந்த நாணயங்களை ஒற்றை சக்கரம் கொண்ட தள்ளு வண்டியில் கொண்டு வரும் போது, வண்டியில் இருக்கும் நாணயங்களின் கணத்தால், வண்டியின் சக்கரம் உடைந்து விட்டதாகவும்  ஃப்ளாடெனின் தோழி ஒலிவியா ஆக்ஸ்லே தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.

மேலும் தன்னிடம் இருக்கும் நாணயங்களை மொத்தமாக குளிக்கும் தொட்டியில் கொட்டி, தண்ணீர், சோப்பு, வினிகர் என பல வழிகளில் சுத்தம் செய்ய முயன்றதாகவும், ஆனால் எந்த பலன் கிடைக்கவில்லை எனவும் ஃப்ளாடென் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து எழுந்த சர்ச்சையில், ஊழியர்களுக்கு, அவர்களின் ஊதியத்தை இப்படிக் கொடுப்பது தார்மீக ரீதியில் சரியல்ல, அதே நேரத்தில் சட்ட விரோதமும் அல்ல பலர் கூறிவருகின்றனர்.

மேலும் அமெரிக்க தொழிலாளர் துறையைச் சேர்ந்த எரிக் ஆர் லுசெரோ கூறியதாக, நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் பேசும் போது, ‘ஊழியர்களுக்கு எந்த கரன்சியில் அவர்களுக்கான ஊதியத்தைக் கொடுக்க வேண்டும் என சட்டத்தில் எங்கும் சொல்லப்படவில்லை’ என கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.