தேர்தல் பரப்புரையின் போது தளபதி விஜயின் திரைப்பட பாடலுக்கு பாஜக வேட்பாளர் நடனமாடிய வீடியோ தற்போது சாமுகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் கோவையில் நட்சத்திர தொகுதியாக உள்ள தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் இன்று பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் பரப்புரை மேற்கொண்டார்.
அவருக்கு ஆதரவாக திரைப்படத்துறை நடிகை மற்றும் தற்போது பாஜக உறுப்பினராக இருக்கும் நடிகை நமீதாவும் வானதி சீனிவாசனுடன் வாக்கு சேகரிப்பில் கலந்து கொண்டார்.
மேலும் நடிகர் விஜய் அவர்களின் மாஸ்டர் திரைப்படத்தில் வரும் வாத்தி கம்மிங் என்ற பாடலுக்கு நமீதா அவர்கள் நடனமாடியாது மட்டுமல்லாமல்,வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு நடனமாட கற்றுக் கொடுத்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இந்த உற்சாகமான தேர்தல் பரப்புரையை வானதி சீனிவாசன் அவர்களே தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ‘வாத்தி கம்மிங்’ எனவும் குறிப்பிடுள்ளார்.