தாமரை பூ தடாகத்தில் சிக்கி ஏன் இறக்கிறார்கள் ? மாஸ்டருக்கு நடந்தது என்ன ?

வவுனியாவில் தாமரைப்பூ பறிக்கச்சென்ற ஆசிரியர் ஒருவர் வைரவபுளியங்குளம் குளப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஆசிரியர் இன்றையதினம் அந்த பகுதியில் உள்ள குளத்தில் தாமரைப்பூவினை பறிப்பதற்காக சென்றுள்ளார். எனினும் நீண்ட நேரமாகியும் அவரை காணவில்லை.இதனையடுத்து அப்பகுதியில் ஒன்றுகூடிய பொதுமக்கள் தேடுதல் மேற்கொண்டதுடன் சம்பவம் தொடர்பில், பொலிசாருக்கும் தெரியப்படுத்தினர். நீண்ட நேரத்தின் பின்னர் குறித்த ஆசிரியரின் சடலம் குளத்தில் இருந்து பொதுமக்களால் மீட்கப்பட்டது.

வவுனியா நகரப்பாடசாலை ஒன்றைசெர்ந்த பரந்தாமன் வயது33 என்ற ஆசிரியரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் ஆலயம் ஒன்றின் தேவைக்காக தாமைரப்பூவை பறிக்கச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவருக்கு நன்றாக நீந்தத் தெரியும் என்பது பலர் அறிந்த விடையம். பொதுவாக தாமரைப் பூ தடாகத்தில், தாமரைப் பூவின் வேர்கள் அங்கும் இங்கும் பரவி ஒரு வலைப் பின்னல் போலக் காணப்படும். அதில் சிக்கி தான் பலர் இறப்பதாக நாம் நினைக்கிறோம்.

ஆனால் அது தவறு என்கிறார்கள் விடையம் தெரிந்த சிலர். தமரையின் வேர் எம்மை ஒரு போதும் சிக்க வைப்பது இல்லை. ஆனால் தாமரை உள்ள தடாகம் பொதுவாக சேறு நிறைந்த மண்ணோடு காணப்படும் என்றும். அதில் சில வேளைகளில் நாம் மிதிக்கும் போது மீதேன் போன்ற வாயுக்கள் வெளிப்படுவது உண்டு. அவற்றில் சில வாயுக்கள் உடனே எம் சுய நினைவை இழக்கச் செய்து விடும் என்கிறார்கள். இதனால் மயங்கி விழுந்தே பலர் இறப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதனை சரியாக எவரும் பார்த்தது இல்லை.  பரந்தாமன் மாஸ்டரின் குடும்பத்தாருக்கு அதிர்வின் ஆழ்ந்த இரங்கல். அவர் ஆத்மா சாந்தியடைய நாமும் பிரார்த்திப்போமாக.