சுயஸ் கால்வாயில் கப்பல்: லண்டன் கடைகளில் அதிகரிக்கும் பொருட்களின் விலை !

சுயஸ் கால்வாயை கடந்து கொண்டு இருந்த மாபெரும் சரக்கு கப்பல் கடும் காற்று காரணமாக கரை தட்டி, சுயஸ் கால்வாயை முற்றாக முடிக்கியுள்ளது. சுமார் 1,300 அடி நீளமான எவர் கிரீன் என்ற இந்த கப்பல் சுயஸ் கால்வாயை முடக்கியுள்ளதால். ஒரு நாளைக்கு 9 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்படுவதாக ஒட்டு மொத்த கப்பல் கம்பெனிகள் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவில் இன்னும் 3 வாரங்களில் பல கடைகள் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில். பிரித்தானியாவுக்கு வர உள்ள சுமார் 122 கப்பல்கள் தற்போது வர முடியாமல் சிக்கி தவிப்பதால். சில பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக தெற்காசியாவில் இருந்து வரும் பொருட்களுக்கே தட்டுப்பாடு ஏற்படும் நிலை தோன்றியுள்ளது.