உலகையே அதிரவைக்கும் மூலையை- குறி வைக்கும் துப்பாக்கி – அப்படி என்றால் என்ன என்று தெரியுமா ?

பொதுவாக ராணுவத்தினர் ஒரு கட்டத்தின் உள்ளே இருந்து, அல்லது ஜன்னல் வழியாக வெளியே சுடுவது என்றால் நேராகத் தான் சுட வேண்டும். உதாரணமாக ஜன்னல் வழியாக இடது பக்கம் அல்லது வலது பக்கம் உள்ள நபரை சுட அவர்கள் துப்பாக்கியை அந்த திசை நோக்கி நகர்த்த வேண்டும். அதேவேளை அவரும் எதிரிகளின் கண்களில் தென்படுவார். ஆனால் முதன் முறையா கோனர்களை( அதாவது மூலை முடுக்கை) சுடும் அதி நவீன துப்பாக்கியை பிரித்தானியா தனது படைக்கு கொடுத்துள்ளது.

எனவே துப்பாக்கியின் பின் பக்கம் நேராக இருக்கும். ஆனால் சுடும் பகுதி வலது அல்லது இடது பக்கம் திருப்பக் கூடியது. மேலும் சொல்லப் போனால் துப்பாக்கி முன்னால் உள்ள கமரா பின் பகுதியில் டிஸ்பிளே அவதனால், எதிரிகளை குறி பார்த்து சுட முடியும். உங்கள் உருவத்தை வெளியே காட்டாமல். இது ராணுவத்தின் உயிர்களை காக்கும் ஒரு பொறி முறையாகும் . அந்த வகையில் மிகவும் அதி நவீன துப்பாக்கிகளை பிரித்தானியா தனது எஸ்.ஏ.எஸ் படைகளுக்கு கொடுத்துள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது.