சீனா பிரிட்டனில் உள்ள எந்த மோபைல் போனையும் ஒட்டு கேட்க்கும் திறன் கொண்ட நாடு ?

பிரித்தானியாவில் எந்த மோபைல் தொலைபேசி அழைப்பையும், ஒட்டு கேட்க்கும் திறன் சீனாவிடம் உள்ளதாக ராணுவ புலனாய்வுப் பிரிவு பிரிட்டனை எச்சரித்துள்ளது. என் -கிரிப் அழைப்பு என்று சொல்லப் படும்படும் அதி பாதுகாப்பான மோபைல் போன் அழைப்பை தவிர. சாதாரண பொது மக்கள் மற்றும் ராணுவத்தினர் பேசும் மோபைல் போன் அழைப்புகளை மிக இலகுவாக சீனாவால் ஒட்டுக் கேட்க்க முடியும் என்றும்.

அவர்கள் அந்த தொழில் நுட்பத்தில் மிகவும் வளர்ச்சி கண்டுள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சீனா விண்ணுக்கு அனுப்பிய சாட்டலைட் ஒட்டு கேட்க்கும் திறனை மேலும் அதிகரித்துள்ளது என்றும். எனவே ரகசிய அழைப்புகளை மாத்திரம் அல்ல, எல்லா அழைப்புகளையும் இனி பாதுகாப்பான முறையில் தான் கையாள வேண்டும் என்று ராணுவ புலனாய்வு பிரிட்டன் அரசை எச்சரித்துள்ளது. Source :  China spies ‘can listen to any mobile phone call in the UK’ as eavesdropping fears grow.