கனடாவில் உள்ள நூலகத்தில் துணிகர கத்திக்குத்து தாக்குதல்!

கனடாவில் உள்ள பிரபல நூலகம் ஒன்றில் நடந்த கத்தி குத்து சம்பவத்தால், ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவின் வடக்கு வான்கூவரின் புற நகர் பகுதியில் இருக்கும் லின் வேலி என்ற நூலகத்தில் நடந்த கத்தி குத்து சம்பவத்தில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நூலகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த நபர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், இந்த கத்தி குத்தி சம்பவத்தால், ஒருவர் உயிரிழந்துள்ளார். 6 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.