நடன அழகியை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்து விட்டார்கள்; நடந்த பயங்கரம் என்ன?

நடன அழகி கொலை

பெங்களூரு ஆர்.டி.நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நிருபதுங்கா லே-அவுட், 4-வது கிராசில் வசித்து வந்தவர் ஷாரா (வயது 28). இவர், ரெசிடன்சி ரோட்டில் உள்ள மதுபான விடுதியில் நடன அழகியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் ஷாராவை ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், பலத்தகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பாிதாபமாக உயிர் இழந்தார்.

நள்ளிரவில் வீட்டுக்கு திரும்பிய குடும்பத்தினர் தங்களது மகள் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆர்.டி.நகர் போலீசார் விரைந்து வந்து ஷாராவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

அப்போது அவரை ஆயுதங்களால் தாக்கி மர்மநபர்கள் கொலை செய்திருப்பது தெரியவந்தது. மேலும் அந்த பெண்ணுக்கு நன்கு தெரிந்த நபர்களே இந்த கொலையை செய்திருக்கலாம் என்று போலீசார ் சந்தேகிக்கின்றனர். ஆனால் அந்த பெண்ணை கொலை செய்த மர்மநபர்கள் யார்? என்ன காரணத்திற்காக கொலை செய்தார்கள்? என்பது தெரியவில்லை.

இதுகுறித்து ஆர்.டி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்மநபர்களையும் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். வீடு புகுந்த நடன அழகியை கொலை செய்த சம்பவம் ஆர்.டி.நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.