தலைவர் பிரபாகரனின் உடலத்தைப் பார்த்த பின்னர் உண்ணாமல் கவலையில் இருந்தேன்; பிள்ளையான் சொல்கிறான்!

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலத்தைப் பார்த்த பின்னர் உண்ணாமல் கவலையில் இருந்தேன் என பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் எடுத்த இறுக்கமான முடிவுகள்தான் விடுதலைப்புலிகளின் அழிவிற்கு காரணமென மற்றவர்கள் சிலர் கூறுவது போன்று நானும் அதை ஏற்றுக்கொள்கின்றேன் போன்ற பல கருத்துக்களை குறித்த நிகழ்வில் அவர் மேலும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.