டாஸ் போட்டதும் ‘கோலி’ சொன்ன தகவல்.. உடனே ‘டிரெண்ட்’ ஆன ஒரு பெயர்.. கோப்பையை கைப்பற்றுமா இந்தியா..?

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

IND vs ENG: T Natarajan replace Kuldeep Yadav in 3rd ODI

IND vs ENG: T Natarajan replace Kuldeep Yadav in 3rd ODI

முன்னதாக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து நேற்று முன்தினம் புனே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனால் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. இப்போட்டியில் வெற்றி பெறும் அணியே கோப்பையை வெல்லும் என்பதால், இரு அணிகளும் வெற்றி பெற முனைப்பு காட்டி வருகின்றன.

IND vs ENG: T Natarajan replace Kuldeep Yadav in 3rd ODI

இந்த நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவுக்கு பதிலாக தமிழக இடதுகை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். டாஸ் போட்டு முடித்ததும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இதை தெரிவித்தார். இதனை வரவேற்கும் விதமாக ‘Nattu’ என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.