ரைட்டுறா ரைட்டு!.. இப்படியே போச்சுனா இந்த வருஷமும் வெளங்குன மாதிரி தான்’!.. அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட்!

தமிழகத்தில் இன்று (27-03-2021) ஒரே நாளில் 2,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

tamil nadu coronavirus covid statistics as on march 27

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 775 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,45,483 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் இன்றைய தினம் 1,241 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுமுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,52,463 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைப் பொருத்தவரை இன்றைய தினம் அரசு மருத்துவமனையில் 5 பேர், தனியார் மருத்துவமனையில் 4 பேர் என மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால், மொத்தமாக தற்போது வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 12,659 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்படைந்த 8,77,279 பேரில் ஆண்கள் 5,29,825 பேர் எனவும், பெண்கள் 3,47,418 பேர் மற்றும் வேற்றுப்பாலினத்தவர் 36 ஆக உள்ளனர்.

தற்போது சென்னை உட்பட தமிழகமெங்கும் கொரோனா பரவல் அதிகமாக காணப்படுவதால், பொதுமக்கள் முன்னேசெரிக்கையாக மாஸ்க் அணிவது உள்ளிட்ட விசயங்களில் அலட்சியம் காட்டாமல் முறையாக பின்பற்ற வேண்டியது மக்களின் கடமை ஆகும்.