இன்று தொடக்கம் இலகுவாகும் லாக் டவுன் – 2 குடும்பத்தை சேர்ந்த 6 பேர் ஒன்றாக கூடலாம் !

ஹாப்பி திங்கள் என்று அழைக்கப்படும், இன்று தொடக்கம் லாக் டவுன் இலகுவாக்கப்பட்டுக்கொண்டு வருகிறது. இன்றோடு 2 குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சந்தித்துக் கொள்ளலாம். மேலும் இன்னும் 15 நாட்களில்(ஏப்பிரல் 12) தொடக்கம் லாக் டவுன் மேலும் இலகுவாக்கப்படுகிறது. முடி வெட்டும் நிலையம் ஜிம் , உள்ளக விளையாட்டு என்று பல வியாபார நிலையங்கள் திறக்கப்பட உள்ளது. பிரித்தானியாவில்  வசிக்கும் 60 மில்லியன் மக்களில், சுமார் 30 மில்லியன் மக்களுக்கு முதல் கட்ட தடுப்பூசிகள் போடப்பட்டு விட்டது.

இதனால் கொரோனா தொற்று விகிதம் 40% சத விகிதத்தால் சரிந்துள்ள நிலையில். கடந்த 24 மணி நேரத்தில் 19 பேர் மட்டுமே இறந்துள்ளார்கள் என்றும். சுமார் 3,200 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டு பிடிக்கப்பட்டதாகவும்  சுகாதார துறை அறிவித்துள்ளது. பிரான்ஸ், ஜேர்மனி , இத்தாலி போன்ற நாடுகள் இன்றுவரை பெரும் திண்டாட்டத்தில் உள்ளது. அவர்களுக்கு போதுமான அளவு தடுப்பூசிகள் இருந்தும். அவர்கள் அதனை உரிய நேரத்தில் அனைவருக்கும் போடவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளது.

அந்த வகையில் பிரித்தானியாவின் NHS சேவை கடு கதி வேகத்தில், ஊசிகளை போட்டுத்தள்ளியுள்ளது என்று தான் கூறவேண்டும்.