தடை லிஸ்டில் உள்ள 19 பேர் உயிரோடு இல்லை- சும்மா கப்ஸா விட்ட ஆட்களையும் தடை செய்த இலங்கை !

இலங்கையின் புலனாய்வுத்துறை இவ்வளவு பலவீனமாக இருக்கும் என்று, தமிழர்கள் சற்றும் நினைத்துப் பார்க்கவில்லை. ஏன் எனில் இலங்கை தடை செய்துள்ள 300 தனி நபர்கள் பட்டியலில் உள்ள 19 பேர்
உயிரோடு இல்லை. அது போக ஐ.நாவில் எதனையும் செய்யாமல், நாங்கள் தான் செய்தோம் என்று சும்மா பெயர் அளவில் அறிக்கை விட்ட அமைப்புகளை கூட இலங்கை தடை செய்துள்ள விடையம் தமிழர்கள்
மத்தியில் சிரிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐயோ நான் ஒன்றுமே செய்யவில்லையே, ஆனால் என் பெயர் எப்படி வந்து என்று பலர் ஆச்சரியப்பட. மேலும் சிலர் ஒன்றுமே செய்யாமல் என் பெயர் தடை லிஸ்டில் உள்ளது. இனி எனக்கு மதிப்பு உயரும் என்று
கூட சிலர் பேசுகிறார்கள் என்றால், இலங்கை அரசு கடந்த 10 வருடங்களில் எந்த அளவு புலனாய்வு துறையில் கீழே இறங்கியுள்ளது என்பதனை நன்றாக அறிய முடிகிறது.