தென்றல் சீரியலில் நடித்துள்ள ஐஸ்வர்யா மேனன் புகைப்படம்.. பிளாஸ்டிக் சர்ஜரிக்கு முன்னாடி இப்படித்தான் இருந்தாங்க!

சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்த பல பிரபலங்களும் தற்போது சினிமாவில் கவனிக்கப்படும் நடிகர் நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.   ஆனால் அவர்களில் பலர் சன் டிவி சீரியல்களில் நடித்துள்ளனர் என்ற விஷயம் கடந்த சில வருடங்களாகத்தான் ரசிகர்களுக்கு தெரியவருகிறது. அந்த வகையில் விஜய் சேதுபதி, சமுத்திரகனி போன்றோரை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

அதே வரிசையில் தற்போது இளம் ரசிகர்களின் சென்சேஷன் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஐஸ்வர்யா மேனனும் இடம் பெற்றுள்ளார் என்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. கடந்த சில வருடங்களாகவே ஐஸ்வர்யா மேனன் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மாற்றினார் என்ற வாதம் இணையத்தில் அதிகமாக வலம்வருகிறது.

அதை உண்மையாக்கும் வகையில் சன் டிவியில் சூப்பர் ஹிட் சீரியலாக வலம் வந்த தென்றல் சீரியலில் ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.  இதில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதற்கு முன்னாடி நடித்துள்ளதுதான் விஷயமே. இளம் வயதிலேயே பார்ப்பதற்கான ஆண்ட்டி போல இருக்கும் ஐஸ்வர்யா தற்போது பளபளப்பாக இருப்பதற்கு பிளாஸ்டிக் சர்ஜரி தான் காரணம் என்ற உண்மை ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது.

ஐஸ்வர்யா மேனன் மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் நடிகைகளாக இருக்கும் பலரும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தங்களுடைய முகங்களை மாற்றிக் கொண்டனர். இவ்வளவு ஏன், நம்ம சமந்தாவே பிளாஸ்டிக் சர்ஜரி செய்தவர் தானே. பட வாய்ப்புகளுக்காக அழகை மெருகேற்றி கொள்வது சகஜம்தானப்பா.