மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்றவர் மீது ‘ஷூ’வை வீசிய போலீஸ்காரர்!

பெங்களூரு ஜாலஹள்ளி பி.இ.எல். சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் ஹெல்மெட் அணிந்து இருந்தார். ஆனால் பின்னால் அமர்ந்து இருந்தவர் ஹெல்மெட் அணியவில்லை. இதனை கவனித்த போக்குவரத்து போலீஸ்காரர் ஒலேகர் என்பவர், மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றார். ஆனால் மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் நிறுத்தாமல் சென்றார்.

இதனால் ஒலேகர் தனது காலில் அணிந்திருந்த ஷூவை கழற்றி, மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது வீசினார். ஆனால் அந்த ‘ஷூ’ மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது படவில்லை. இதுதொடர்பாக காட்சிகளை பின்னால் காரில் சென்ற ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ள நிலையில், போலீஸ்காரர் ஒலேகரின் செயலுக்கு பலரும் எதிர்ப்பும், கண்டனமும் தொிவித்து வருகிறார்கள்.

இந்த வீடியோ கடந்த 2018-ம் ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. சமூகவலைதளங்களில் தற்போது மீண்டும் வைரலாகி உள்ளதாக கூறப்படுகிறது.