இங்கிலாந்தில் மில்லியன் கணக்கான ஆண்டுகள் பழமையான புதைபடிமத்தை கண்டுபிடித்த 6 வயது சிறுவன்!

இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்தில் வசித்து வரும் சித்தார்த் சிங் ஜமாத் என்ற பரம்பொருள் ஆராய்ச்சி ஆர்வம் கொண்ட 6 வயது சிறுவன். வால்செல் பகுதியில் மில்லியன் கணக்கான ஆண்டுகள் பழமையான புதைபடிமத்தை விலங்கின் கொம்பு போன்ற ஒரு தொன்மையான புதைபடிமத்தை தனது தந்தையுடன் சேர்ந்து கண்டுபிடித்துள்ளான்.

புழுக்களை தேடி ஈரமண்ணில் தான் குழி தோண்டியபோது இந்த கொம்பு கண்டெடுக்கப்பட்டதாக அவன் கூறியுள்ளான். இவனது தந்தை விஷ் சிங் பழம்பொருள் ஆராய்ச்சி நிபுணர் ஆவார்.

251 முதல் 458 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த விலங்கின் கொம்பு இது என அவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆய்வு பிரிவுக்கு தனது மகனின் கண்டுபிடிப்பை அனுப்பி வைக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.