இறுதி முடிவு அடுத்த வாரம்; இராணுவத்தளபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்தலாமா, இல்லையா என்பது குறித்த இறுதி முடிவு அடுத்த வாரம் எடுக்கப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்துவதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் நியதிகளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு கோவிட் 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல் மையம் பரிந்துரைத்துள்ளது..

இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

இதற்கிடையில், வரவிருக்கும் புத்தாண்டு பண்டிகை காலங்களில் பொதுமக்களின் பயணத்தை முடிந்தவரை தடைசெய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.