பிரிட்டனில் புதிதாக தடுப்பூசி தொழிற்ச்சாலை: பொறிஸ் ஜோன்சனின் அதிரடி முடிவு !

உலகின் மிகப் பெரிய மருந்து கம்பெனிகளில் ஒன்றான கிளாஸ்கோ-ஸ்மித் நிறுவனத்தோடு இணைந்து, அரசு 60 மில்லியன் பவுண்டுகள் செலவில் தடுப்பூசி தொழிற்சாலை ஒன்றை உடனடியாக கட்ட உள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. பிரித்தானியாவின் டூரஹாம் நகரில் இந்த தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனம் தொழிற்சாலையை அமைக்க உள்ளது. ரஷ்ய தயாரிப்பான நோவா-வாக்ஸ் எனப்படும் தடுப்பூசிகளை இங்கே தயாரிக்கவும். மேலும் ஆக்ஸ்பேட் மருந்தை தயாரிக்கவும் இது பயன்படும். எனவே இனி வரும் காலங்களில் ஐரோப்பிய நாடுகளை நம்பி இருக்க தேவை இல்லை. பிரித்தானியாவே அவசர கால அடிப்படையில் தனக்கு தேவையான தடுப்பூசிகளை தயாரிக்கும்.