களவெடுக்க வீட்டுக்குள் சென்று- அவசரமாக ஒன்றுக்கு இருந்து மாட்டிக் கொண்ட கடூம் என்ற இளைஞர் !

பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரில், இரவு 3 மணிக்கு தம்பதிகள் வசிக்கும் ஒரு வீட்டுக்குள் கடூம் என்ற இந்த இளைஞர் நுளைந்துள்ளார். ஆனால் அவருக்கு அவசரமாக சிறு நீர் வழிக்க வேண்டும் போல் இருந்ததால். களவு எடுக்க முன்னர் பாத்ரூம் சென்று சிறு நீர் கழித்துள்ளார். மேலும் பழக்க தோஷத்தில் தண்ணீர் செல்லும் பட்டனை அழுத்தி விட்டார். இதனால் எழுந்த சத்தத்தை அடுத்து தம்பதிகள் விழித்துக் கொண்டார்கள்.

அவர்கள் படுக்கை அறைக்குச் சென்ற கடூம், அவர்களை கொலை செய்வேன் என்று மிரட்டிவிட்டு. பின்னர் தப்பிச் சென்றுவிட்டார். இன் நிலையில் பொலிசார் அவரை வலை வீசி பிடித்துவிட்டார்கள்.