எகிப்தின் சூயஸ் கால்வாயில் கடந்த 23-ம் தேதி ஜப்பான் நாட்டை சேர்ந்த எவர்கிரீன் என்ற ராட்சத சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தபோது, பலத்த காற்று காரணமாக கப்பல் கால்வாயின் குறுக்காக சிக்கிக்கொண்டது.

சரக்கு போக்குவரத்து கடல்வழிப் பாதையில் உலகின் மிக முக்கியமான ஒன்றான இந்த வழித்தடத்தின் மூலமே ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா கண்டங்கள் இணைக்கப்படுகின்றன. இதனால், சூயஸ் கால்வாய் பல்வேறு நாடுகளை இணைக்கும் வர்த்தகம் மற்றும் கடல் வழித்தடமாக விளங்குகிறது.
எவர்கிரீன் கப்பலால், பிற கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு, சுமார் 321 கப்பல்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தொடர்ந்து, இந்த கப்பலை மீட்க, 7-வது நாளாக இன்றும் மீட்பு பணிகள் நடந்தன.
6 நாட்கள் தீவிர போராட்டத்திற்கு பிறகு, தற்போது சுயமாக எவர்கிரீன் கப்பலே நகர தொடங்கியது. இதன் காரணமாக ஏனைய பிற கடலில் சிக்கிய 300-க்கும் அதிகமான கப்பல் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.