ரெஸ்ட்லாம் இல்ல, இன்னும் வேகமா ஓடணும்…’ ‘இதோ நானும் கிளம்பிட்டேன்ல…’ – கோலி பதிவுக்கு ரிப்ளை கொடுத்த வீரர்…!

சற்றும் ஓய்வில்லாமல் இந்திய கேப்டன் விராட் கோலி நேற்று நடைபெற்று முடிந்த இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றவுடன் தன் ஐபிஎல் போட்டிக்கு தயாராகி வருகிறார்.

Virat Kohli is getting ready for his IPL match rcb

இந்தியா மற்றும் இங்கிலாத்திற்கு இடையே நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் 2-1 என்ற வித்யாசத்தில் இந்திய அணி வெற்றியடைந்தது.

கிரிக்கெட் ரசிகர்களிடையே வெற்றியின் குதூகலம் அடங்காத நிலையில் இந்தியாவை வழிநடத்திய கேப்டன் விராட் கோலி, தனது அடுத்த வேலையான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2021) மீது தனது கவனத்தை மாற்றியுள்ளார்.

2021ஆம் ஆண்டுக்காண ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 9-ம் தேதி ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் கேப்டன் விராட் டிரெட்மில்லில் ஓடுவது போன்ற வீடியோவை பதிவிட்டுள்ளார். அப்போது ஏ.பி.டிவில்லியர்ஸ் பயணத்திற்கு கிளம்புவது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு நானும் கிளம்பிவிட்டேன், அணியில் வந்து இணைகிறேன் என பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து விராட் கோலி, “நீங்கள் ரன் எடுப்பதற்காக இன்னும் வேகமாக ஓடுவீர்கள் என நம்புகிறேன்” என்றார். இதற்குப் பதிலளித்த ஏ.பி.டிவில்லியர்ஸ், நாளைக்கு ஓட்டப்பந்தயம் வைத்து அதனைத் தெரிந்துகொள்ளலாம் எனக் கூறியுள்ளார். கோலி- டிவில்லியர்ஸின் இந்த உரையாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Virat Kohli is getting ready for his IPL match rcb

கடந்த ஆண்டு ஐபிஎல் பிளேஆஃப்களை எட்டிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி), நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஏப்ரல் 9 ஆம் தேதி தன் முதல் போட்டியை சென்னையில் ஆடவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.