யாருங்க அது டோர ஓப்பன் பண்றது…? இது என்ன ரோடுன்னு நெனச்சீங்களா…? – நடுவானில் திகில் காட்டிய நபர்…!

நடுவானில் சாகசம் செய்வதாக விமானத்தில் பயணி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

passenger tried to open the emergency exit door of the plane

இதைக்கவனித்த விமானப் பணிப்பெண்கள் அதிர்ச்சியடைந்து அவரை தடுக்க முயற்சித்துள்ளனர். ஆனால் கவுரவ் விடாப்பிடியாக இருக்கவே மற்ற பயணிகள் உதவியுடன் அவரைத் தடுத்து நிறுத்தினர்.

மேலும் விமானம் தரையிரங்கும் வரை அந்த நபரை சுற்றி பாதுகாப்பாக பலர் நின்றுள்ளனர். இந்த சம்பவம் விமானத்தில் பயணம் செய்த அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியது எனலாம்.

passenger tried to open the emergency exit door of the plane

இதுகுறித்து கூறிய பயணிகள், ‘விமானம் புறப்பட தொடங்கி யதும் அவர் இருக்கையில் உட்காராமல் அங்கும் இங்கும் திரிந்துகொண்டிருந்தார். விமானம் நடுவானுக்கு சென்றதும் அவர் திடீரென எமர்ஜென்சி கதவை திறக்க முயற்சி செய்தார். அவரை தடுப்பதற்குள் எங்களுக்கு திகிலாக மாறியது’ எனக் கூறியுள்ளனர்.

passenger tried to open the emergency exit door of the plane

விமானம் தரையிறங்கிய பின் சாகசம் செய்யமுயன்ற கவுரவ் என்ற பயணியை வாரணாசி விமானநிலையத்திலுள்ள மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினரிடம் (சிஐஎஸ்எஃப்) ஒப்படைத்துள்ளனர். அதன்பின் கவுரவ் கைதுசெய்யப்பட்டு உள்ளூர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.