பொலிஸார் தாக்கினால் திரும்பி தாக்கலாம்; இலங்கையில் அறிவிப்பு; இனி என்ன திருப்பி அடியுங்கள்!

பொலிஸார் தமது உத்தியோகபூர்வ சீருடையுடன் சிவில் நபர் மீது தேவையற்ற வகையில் தாக்குதல் நடத்தினால், உயிர்பாதுகாப்பிற்காக அவர் பதில் தாக்குதலை நடத்தக்கூடிய அதிகாரம் சட்டத்தில் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் இது தொடர்பாக ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மஹரகம பொலிஸ் நிலைய வீதிப்போக்குவரத்து அதிகாரி, நேற்றையதினம் வீதியில் வைத்து பட்டப்பகலில் நபர் ஒருவர் மீது நடத்திய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்ட அதேவேளை, இன்று நுகேகொடை நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் குறித்த தாக்குதலுக்கு இலக்காகிய நபரால் பதில் தாக்குதலை பொலிஸார் மீது நடத்தியிருக்கலாமா என பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் வினவியபோது, முடியும் என்று அவர் பதிலளித்திருக்கின்றார்.

குற்றவியல் தண்டனைச் சட்டக்கோவையின் 92,93ஆம் பிரிவுகளில் அதற்கான விளக்கம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.