பிரிட்டன் கடல் கரைகளை நாசம் செய்த மக்கள்: லட்சக் கணக்கில் கூடி ஆரவாரம் !

நேற்றைய தினம் பிரித்தானியாவில் நாடு தழுவிய ரீதியில் சகல இடங்களிலும் அதிக வெப்ப நிலை காணப்பட்டடது. இதனை அடுத்து பெரும் தொகையில் மக்கள் கடல் கரைகளுக்கு சென்று நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒன்று கூடியுள்ளார்கள். 2 குடும்பத்தை சேர்ந்த 6 நபர்கள் பொது இடங்களில் கூடலாம் என்ற தளர்வு காணப்படுவதால், கடல்கரைக்கு மக்கள் படை எடுத்தார்கள். இதனால் பொலிசாரால் இவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஆனால் கடல்கரைகளில் பிளாஸ்டிக் கப், பிளாஸ்டிக் பாக் மற்றும் BBQ எரிபொருட்கள் என்று பல கழிவு பொருட்களை மக்கள் அப்படியே நிலத்தில் வீசி விட்டு சென்றுவிட்டார்கள், அப்பகுதில் (உள்ளூரில்) வசிக்கும் மக்களும் கவுன்சில் காரர்களும் இணைந்தே இன்று காலை அதனை சுத்தம் செய்து வருகிறார்கள். இவ்வாறு நிலத்தில் கழிவுகளை போட்டுச் செல்லும் நபர்களுக்கு தண்டம் அறிவிக்க உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

நிலத்தில் மற்றும் வீதிகளில் கழிவுகளை வீசும் நபர்களை கண்டு பிடிக்க என விசேட கமரா ஒன்றை பொருத்தும் திட்டம் ஒன்றையும் பிரித்தானிய பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள். பொதுவாக காரில் இருந்து சிகரெட் துண்டு ஒன்றை எறிந்தால் கூட. அதனை துல்லியமாக கண்டு பிடித்து கார் ஓனருக்கு தண்டப் பணத்தை அனுப்பும் கமராக்களை பொருத்த உள்ளார்கள் பொலிசார்.