முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரை கற்களால் தாக்கிய மர்ம நபர்கள்..

தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Former India cricketer Ashok Dinda attacked by unidentified people

Former India cricketer Ashok Dinda attacked by unidentified people

இதுகுறித்து தெரிவித்த அசோக் திண்டாவின் மேனேஜர், மர்ம நபர்கள் சிலர் அசோக் திண்டாவின் வாகனத்தை திடீரென கற்களால் தாக்கியதாகவும், இதில் அசோக் திண்டாவிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சாலையின் அனைத்து வழிகளிலும் அவர்கள் திரண்டதால் தங்களால் தப்பிக்க முடியவில்லை என அசோக் திண்டாவின் மேனேஜர் தெரிவித்துள்ளார்.

Former India cricketer Ashok Dinda attacked by unidentified people

இந்த நிலையில் இந்த தாக்குதல் தொடர்பான முழு அறிக்கையையும் உடனடியாக சமர்பிக்க வேண்டும் என அம்மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் அவரது கார் கதவை திடீரென மூடியதால், மம்தா பானர்ஜியின் காலில் காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அசோக் திண்டாவை மர்ம நபர்கள் தாக்கிய சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.