யாழில் சிறப்பு அதிரடி முற்றுகை நடவடிக்கை; பல தமிழ் இளைஞர்களை பிடித்து விட்டார்கள்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இருவர் மதுவரி திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் ஒரு கோடி பெறுமதியான ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடனேயே வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை முன்னெடுத்த சிறப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மதுவரித் திணைகளத்தின் சாவகச்சேரி நிலைய பொறுப்பதிகாரி அசோகரட்ணத்தின் அறிவுறுத்தலில் மதுவரிப் பரிசோதகர் வசீகரனின் தலைமையில் மல்லாகம் மற்றும் பருத்தித்துறை மதுவரி நிலைய அதிகாரிகளின் ஒத்துழைப்புடனேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து உயிர்கொல்லி போதைப்பொருளான ஹெரோயின் ஒரு கிலோ கிராம் கைப்பற்றப்பட்டது. அதன் பெறுமதி சுமார் ஒரு கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டையைச் சேர்ந்த சந்தேக நபர்கள் இருவரும் இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.