ஹோட்டல்ல ‘WIFI’ சரியாக வரலைன்னு ட்வீட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் வீரர்.. அதுக்கு ‘அஸ்வின்’ கொடுத்த கலக்கல் பதில்..!

ஹோட்டல் அறையில் WiFi சரியாக கிடைக்கவில்லை என பதிவிட்டிருந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரருக்கு அஸ்வின் ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

Ashwin hilarious reply to Sam Billings WiFi issue

Ashwin hilarious reply to Sam Billings WiFi issue

இதனால் ஒவ்வொரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை அணியின் முதல் போட்டி மும்பையில் நடைபெற உள்ளதால், சிஎஸ்கே வீரர்கள் சமீபத்தில் மும்பை சென்று பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மும்பை வந்தடைந்துள்ளது.

Ashwin hilarious reply to Sam Billings WiFi issue

இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரும், டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரருமான சாம் பில்லிங்ஸ், தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஹோட்டல் அறையில் WiFi சரியாக கிடைக்கவில்லை என்றும், அதனால் ஜியோ அல்லது ஏர்டெல் இவற்றில் எந்த WiFi dongle-லை பயன்படுத்தலாம் என ட்வீட் செய்திருந்தார். பின்னர் அதை டெலிட் செய்துவிட்டார்.

Ashwin hilarious reply to Sam Billings WiFi issue

இதற்கு பதிலளித்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், ‘நான் ஒன்று (WiFi dongle) வாங்கியுள்ளேன் நண்பா, சிறப்பாக உள்ளது. ஆனால் இந்த ஹோட்டல் சுவர் அதன் வேகத்தை தடுக்கிறது’ என குறும்பாக பதிலளித்துள்ளார். இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சார்பாக அஸ்வின் விளையாடுகிறார் என்பது குறுப்பிடத்தக்கது.