24 தமிழர்களை திருப்பி அனுப்பிய ஜேர்மனி- சுவிஸ்- உடனே கைது செய்த CID பிரிவினர்

ஜேர்மன் மற்றும் சுவிஸ் ஆகிய நாடுகளில் இருந்து, 24 ஈழத் தமிழர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள் என்று அதிர்வு இணையம் அறிகிறது. முறையே இவர்கள் 2012 மற்றும் 2013 ஆகிய வருடத்தில் இருந்து, குறித்த 2 நாடுகளில் மறைவாக வாழ்ந்து வந்ததாக கூறி, அவர்களை அன் நாடுகள் நாடு கடத்தியுள்ள அதேவேளை. பண்டார நாயக்க விமான நிலையத்தில் வைத்தே சிங்கள புலனாய்வுத் துறையினர் அவர்கள் அனைவரையும் கைது செய்துள்ளதோடு.

தடுப்பு முகாமுக்கு கொண்டு சென்று தனிமைப்படுத்தியும் உள்ளார்கள். ஜேர்மனி 20 பேரையும் சுவிஸ் 4 பேரையும் இவ்வாறு திருப்பி அனுப்பி அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.