குஷ்புவை தூக்கிகிட்டு என்னால் ஆட முடியாது.. இயக்குனரிடம் கதறிய நடிகர்

தமிழ் சினிமாவில் உயரத்தை குறையாக எடுத்துக் கொள்ளாமல் அதையே பாசிட்டிவாக வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த நடிகர் ஒருவர் குஷ்புவை தூக்கிக் கொண்டு ஆட முடியாது எனக் கூறியதாக தயாரிப்பாளர் ஒரு சமீபத்திய பேட்டியில் கூறியது ரசிகர்களை கிச்சுகிச்சு மூட்டியுள்ளது.

வடக்கிலிருந்து தென்னிந்தியாவை ஆண்ட தமிழ் நடிகைகளில் மிக மிக முக்கியமானவர் குஷ்பூ. அந்த காலத்தில் குஷ்புவுக்கு கோவில் கட்டிய வரலாறெல்லாம் உண்டு. அந்தளவுக்கு தன்னுடைய கொழுக் மொழுக் தேகத்தால் அனைவரையும் கவர்ந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் அவர் கால் பதிக்காத இடமே கிடையாது. கால் வைத்த இடத்திலெல்லாம் முன்னணி கதாநாயகியாக மாறினார். தளதளன்னு ஒரு ஹீரோயின் இருந்தால் எந்த நடிகருக்கு தான் ஆசை வராது.

தொடர்ந்து ஒன்றுக்கு இரண்டு படங்களாக பட வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்து நம்பர்-1 கதாநாயகியாக உயர்த்தி விட்டனர். பின்னர் ஒரு கட்டத்தில் நடிப்பிலிருந்து விலகி தயாரிப்பில் கவனம் செலுத்தி வந்த குஷ்பு அரசியலையும் விட்டு வைக்கவில்லை.

குஷ்பு 90 காலகட்டங்களில் நன்றாக புஷ்டியாக இருப்பார். அப்போது இயக்குனர் மற்றும் நடிகர் பாண்டியராஜ் தொடர்ந்து பல காமெடி படங்களை இயக்கி ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தார். குஷ்பு மற்றும் பாண்டிராஜ் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் கோபாலா கோபாலா.

இந்த படத்தில் இடம் பெற்ற ஒரு ரொமான்டிக் பாடலில் நடன இயக்குனர் பாண்டியராஜிடம் குஷ்புவை தூக்கி நிறுத்த வேண்டும் என்று கூறிவிட்டாராம். இதை கேட்டு அதிர்ந்து போன பாண்டியராஜ் இதெல்லாம் நடக்கிற காரியமா என தயாரிப்பாளரிடம் வேடிக்கையாக கூறியதை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.