28,000 ஆயிரம் ஆண்டுகள் சார்ஜில் இருக்க கூடிய NDB பற்றரி இது தான் – 2023ல் விற்பனைக்கு வருகிறது

அணு சக்த்தி கழிவில் இருந்து, தயாரிக்கப்படும் டைமன் என்.டி.பி பற்றரிகள், 2023ம் ஆண்டு விற்பனைக்கு வரும் என்று அமெரிக்க நானோ தொழிற்சாலை அறிவித்துள்ளது. ஒன்று அல்ல 2 அல்ல, சுமார் 28,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக பற்றரி சார்ஜில் இருக்கும் என்றும். பற்றரியில் மின்சாரம் குறையும் வேளை. அது மீண்டும் தன்னை சார்ஜ் செய்து கொள்ளும் வல்லமை கொண்டது என்றும் கூறப்படுகிறது.  Source:  Radioactive DIAMOND battery powered by nuclear waste ‘will run for 28,000 years’ and could go on sale by 2023.

இந்த பற்றரிகளை மோபைல் பொனுக்குள் பொருத்த திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. பெரும்பாலும் 2024ல் வரும் மோபைல் போன்களில் இனிமேல் சார்ஜ் செய்யும் இடமே இருக்காது. சார்ஜர் வயர் இருக்காது. மேலும் சொல்லப் போனால் சார்ஜ் செய்வது என்றால் என்ன என்று இனி பிறக்கும் குழந்தைகள் கேள்வி கேட்க்கும் நிலை கூட வரலாம். அப்படி தொழில் நுட்ப்பம் வளர்ந்து விட்டது போங்கள். இந்த பற்றரிகள் உலகை உலுக்கிப் போட்டுள்ளது என்று தான் கூறவேண்டும்.