ஹிட்மேனை போலவே ‘பேட்டிங்’ செய்து காட்டிய ‘மகள்’.. “ப்பா, செம ‘க்யூட்’டா பண்றா..” நெட்டிசன்களின் மனதை கொள்ளை கொண்ட அசத்தல் ‘வீடியோ’!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை வெற்றிகரமாக முடித்துள்ள இந்திய அணியின் வீரர்கள், அடுத்ததாக ஐபிஎல் தொடருக்கு வேண்டி, தங்களது அணியுடன் இணைந்து தீவிர பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்து விட்டனர்.

rohit sharma daughter samaira cheers up for mumbai indians

rohit sharma daughter samaira cheers up for mumbai indians

இந்நிலையில், ரோஹித் ஷர்மா தனது மனைவி மற்றும் மகளுடன் இருப்பது தொடர்பான வீடியோ ஒன்றை மும்பை இந்தியன்ஸ் அணி, தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில், ரோஹித்தின் மகள் சமைரா, தனது தந்தையின் ஹெல்மெட்டை போட்டுக் கொண்டு, அவரைப் போலவே புல் ஷாட் அடித்துக் காட்டுகிறார். மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் பெயரை க்யூட்டாக சொல்லும் சமைரா, மும்பை அணியை தான் எப்படி ஊக்குவிக்கப் போகிறேன் என்பதையும் செய்து காட்டுகிறார்.

 

மழலை மொழியில், சமைரா மிகவும் அழகாக பேசும் இந்த வீடியோ, ஐபிஎல் ரசிகர்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியே ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.