தொடங்கியது #VIJAY65… ஸ்டைலிஷ் விஜய்யுடன் பிக்பாஸ் கவின்… பூஜையில் பூஜா ஹெக்டே மிஸ்ஸிங்!

நெல்சனின் மூன்றாவது படமாக #Vijay65-ன் ஷூட்டிங் இன்று பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. சென்னையில் ஒரு சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கும்நிலையில், தேர்தலுக்குப்பின்னர் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது  என அதிர்வு இணையம் அறிகிறது. இந்த படப்பிடிப்பு லண்டன் மற்றும் சுவிஸ் நாட்டில் இடம்பெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது..

கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். இவர் அடுத்து இயக்கி ரிலீஸுக்கு காத்திருக்கும் படம் ‘டாக்டர்’. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படம் வரும் மே மாதம் ரிலீஸாகயிருக்கிறது.

இதற்கிடையே நெல்சனின் மூன்றாவது படமாக #Vijay65-ன் ஷூட்டிங் இன்று பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. சென்னையில் ஒரு சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கும் நிலையில், தேர்தலுக்குப் பின்னர் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர் தமிழில் ‘முகமூடி’ படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகமானவர். ‘முகமூடி’க்குப் பிறகு வேறு எந்த தமிழ்ப்படத்திலும் நடிக்காத பூஜா ஹெக்டே தெலுங்கு படங்களில் நடித்துவந்தார். படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பிக்பாஸ் கவின் நடிக்கயிருக்கிறார். அவர் இன்று பூஜையில் கலந்துகொண்டிருக்கிறார்.

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ உள்பட பல்வேறு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரம்ஹம்சாதான் விஜய் 65 படத்துக்கும் ஓளிப்பதிவு செய்கிறார். இன்று நடைபெற்ற பூஜையில் விஜய், இயக்குநர், தயாரிப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்ட நிலையில் படத்தின் ஹீரோயின் பூஜா ஹெக்டே கலந்துகொள்ளவில்லை. வேறொரு படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் பூஜா பூஜையில் மிஸ்ஸிங்!