மது போதையில் விகாரை வளாகத்திற்குள் பிக்கு சண்டித்தனம்; இதுதான் சிங்களம்; வேடிக்கை பார்த்த பொலிஸார்!

பௌத்த மதகுரு ஒருவர் மது அருந்திவிட்டு, விகாரை வளாகத்தில் குழப்பம் விளைவித்த சம்பவம் ஒன்று தென்னிலங்கையில் பதிவாகியுள்ளது.

இச்சம்பவம், காலி – ஜின்தொட்டை பகுதியில் அமைந்துள்ள விகாரையொன்றில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினமும் வேறு ஒரு பௌத்த பிக்கு ஒருவரை, மது அருந்தியிருந்த பிக்கு கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைப் பார்த்த மக்கள், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அவரை கைது செய்ய முற்பட்ட போது குறித்த மதகுரு பொலிசாரை கடுமையாக சாடியிருந்தார். மது போதையில் பௌத்த மதகுரு, அனைவரையும் அடித்து விரட்டிய காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

காணி பிரச்சினை ஒன்றின் காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத குருவின் மேலாடை கழன்று விழுந்த நிலையிலும், சண்டித்தனத்தை அடக்க முடியாமலும், எதிர்த்து ஏதும் செய்ய முடியாத நிலையில் பொலிஸார் வேடிக்கை பார்த்ததாக மக்கள் தெரிவித்திருந்தனர்.

எனினும், அவரை கைது செய்து நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தியதன் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் குறித்த பௌத்த பிக்கு இன்றைய தினம் காலையும் மதுபோதையில் அமைதியற்ற முறையில் நடந்துகொண்டதாக கூறப்படும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

நேற்றைய தினம் தாக்குதலுக்கு உள்ளான ஒருவரின் சகோதரர் இந்த காணொளியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளதோடு, குறித்த பௌத்த பிக்குவுடன் அவர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபடுவதும் அதில் பதிவாகியுள்ளது.

மேலும், பௌத்த பிக்கு மது போதையில் இருப்பதாக அவர் தெரிவிப்பதோடு, அவரை அமைதியாக இருக்குமாறு வலியுறுத்துவதும் குறித்த காணொளியில் பதிவாகியுள்ளது.